அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இன்று (21) கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுக்கவுள்ளன.

கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஜனாதிபதி செயலகம் வரை சென்றடையவுள்ளது.

அதிபர் ஆசிரியர்களின் வேதன முரண்பாடு, கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்னும் உரிய தீர்வுகளை வழங்கவில்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிரியர்கள் தொடர்ச்சியாக 11 நாட்களாகவும் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)