மேலும் 551 பேர் கைது

மேலும் 551 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 551 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 75,058 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச்சாவடிகளில் 1,684 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.

இதன்போது அனுமதியின்றி பயணித்த 164 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதோடு 37 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.