‘ஞானசார’ எச்சரிக்கை : அரசு மௌனம்

‘ஞானசார’ எச்சரிக்கை : அரசு மௌனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்னும் ஒரு வாரத்தில் முழு நாடும் அதிரும் வகையிலான முக்கிய எச்சரிக்கை அடங்கிய தகவல் ஒன்றை வெளியிட உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் தற்போது முஸ்லிம் உறுப்பினர்கள் அமைப்புகள் என பலரும் தனக்கு எதிராக முறையிட்டு வருவதாகவும், அந்த செயற்பாடுகள் முடித்த பின் தாம் மேற்படி தகவல்களை வெளியிட உள்ளதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும், அண்மையில், முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் ஞானசார தேரர் அண்மையில் சிங்கள தனியார் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதில், உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந்த நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன், அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்றும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.