இன்று 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு

இன்று 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு

கடந்த அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நாடாளுமன்ற நிகழ்ச்சித் திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் யோசனைக்கு அமைய திருத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 2016ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு, ஒக்டோபர் 23ஆம் திகதி (இன்று) இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, வரவு – செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு) நவம்பர் மாதம் 20ஆம் திகதியும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 21ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

இதற்காக 12 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அத்துடன், குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் ஏழாம் திகதியும் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 19ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.