ஹோட்டல் உணவுகளின் விலைகளும் உயர்வு

ஹோட்டல் உணவுகளின் விலைகளும் உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   சமையல் எரிவாயு, கோதுமை மா, பால் மா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஹோட்டல் உணவு வகைகளின் விலைகளும் உயர்த்தப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உணவுப் பொதி, ப்ரைட் றைஸ் (fried rice), கொத்து, பால் தேனீர் உள்ளிட்டனவற்றின் விலைகள் நாளை முதல் 10 ரூபாவினால் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு நிகராக உணவுப் பொதிகளின் விலையை உயர்த்தினால் ஒரு பொதிக்கான விலையை 30 ரூபாவினால் உயர்த்த நேரிடும் என குறித்த ஒன்றியத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)