ரிஷாட் பதியுதீனின் மனுக்கள் 15 இல் பரிசீலனைக்கு

ரிஷாட் பதியுதீனின் மனுக்கள் 15 இல் பரிசீலனைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இந்த மாதம் 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம், இன்று (12) தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிடக் கோரி தங்களது சட்டத்தரணிகள் ஊடாக மேற்குறிப்பிட்ட இருவரும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.