கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்

கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகளவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

கிரிப்டோகரன்சி பற்றிய ஆண்டறிக்கையை புரோக்கர்சூஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி உரிமை விகிதத்தின் அடிப்படையில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கிரிப்டோகரன்சி பற்றி தேடுபவர்களில் அமெரிக்கா முதலிடத்திலும், அவர்களை தொடர்ந்து இந்தியா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.