வெப் சீரிஸில் ஒப்பந்தமாகியுள்ள த்ரிஷா

வெப் சீரிஸில் ஒப்பந்தமாகியுள்ள த்ரிஷா

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஹைதராபாத்) – தெலுங்கில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்கு முன்னதாகவே ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ மற்றும் ‘ராங்கி’ உள்ளிட்ட படங்களையும் முடித்துவிட்டார் த்ரிஷா.

புதிதாக நடிப்பதற்கு கதைகள் கேட்டு வந்தார் த்ரிஷா. இதில் வெப் சீரிஸ் ஒன்றின் கதை த்ரிஷாவுக்கு ரொம்ப பிடித்துவிடவே, அதன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தெலுங்கில் தயாராகும் இந்த வெப் சீரிஸை சூர்யா வங்கலா இயக்கி வருகிறார்.

‘பிருந்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.