மின்சார சபை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்?

மின்சார சபை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் 11 இனது தலைவர்கள் மற்றும் எண்ணெய், மின்சாரம் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களது தலைவர்கள் இடையே கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு பொரள்ளை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.