ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து த்ரிஷாவிற்கு ‘கோல்டன் விசா’

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து த்ரிஷாவிற்கு ‘கோல்டன் விசா’

(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை) – நடிகை த்ரிஷாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு திறமையாளர்கள் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

கோல்டன் விசா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதேநேரம் தானாகவே புதுப்பிக்கப்படும்.

கோல்டன் விசா பெற்ற த்ரிஷா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.