எனக்கு டொலரை உழைக்க திறமையில்லை

எனக்கு டொலரை உழைக்க திறமையில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆர்ப்பாட்டங்கள் எங்களிற்கு டொலரை பெற்றுத்தராது அமைச்சர் என்ற வகையில் எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறக்குமாறு இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டொலரை பாதுகாப்பதற்காகவே இலங்கை கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தார்.