சிம்புவின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்த ‘மாநாடு’

சிம்புவின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்த ‘மாநாடு’

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) – சிம்புவின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை ‘மாநாடு’ திரைப்படம் முறியடித்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் படம் வெளியான முதல் நாள் ரூ.8 கோடி வசூலித்துள்ளது. கடைசி நேர இழுபறி, காலை காட்சி ரத்து உள்ளிட்டவற்றை தாண்டி படம் இத்தொகையை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’, ‘மாஸ்டர்’ ‘கர்ணன்’ உள்ளிட்ட படங்களின் முதல் நாள் வசூல் தொகைக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் இதுவாகும். இதன் மூலம் சிம்புவின் முந்தைய படங்களின் வசூலை ‘மாநாடு’ முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.