மக்களை எரிச்சலூட்ட போகிறேன் – பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சால் சர்ச்சை

மக்களை எரிச்சலூட்ட போகிறேன் – பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சால் சர்ச்சை

(ஃபாஸ்ட் நியூஸ் |  பாரிஸ்) – பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்த சொல்லி ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், தடுப்பூசி செலுத்தாத மக்கள் குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:-

தடுப்பூசி செலுத்தாதவர்களை நான் சிறைக்கு அனுப்பப்போவதில்லை. அவர்களை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தவைக்கப்போவதில்லை. என்னுடைய திட்டம் எளிமையானது. மக்களை எரிச்சலூட்ட போகிறேன்.

தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உணவகம் செல்ல முடியாது, காபி குடிக்க முடியாது. படம் பார்க்க முடியாது. ஒன்றுமே செய்ய முடியாது என மக்களை எரிச்சலூட்டபோகிறேன். தடுப்பூசி போடாதவர்களை சிறுநீர் கழிப்பதுபோல் உதாசீனப்படுத்தப் போகிறேன். அதுதான் இனி அரசின் கொள்கை.

இவ்வாறு இம்மானுவேல் மேக்ரான் தரக்குறைவாக பேசினார்.

பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.