இலங்கையில் இருந்த பிரித்தானியாவின் கழிவு கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

இலங்கையில் இருந்த பிரித்தானியாவின் கழிவு கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கடைசி 45 கழிவு கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இன்று காலை ஏற்றுமதி செய்யப்படும் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள CICT முற்றத்தில் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுங்கப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.