சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “இலங்கை இன்னும் முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே உள்ளதாக” சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்பட்ட 65 சதவீதமானவர்கள் எந்தவொரு கொவிட் தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் 40 சதவீதமானவர்களுக்கே செயலூக்கி செலுத்தப்பட்டுள்ளது.அது 75 முதல் 80 சதவீதத்தினை அடையும் போது, சில தளர்வுகளை மேற்கொள்ள முடியும்.

எனவே உரிய வகையில் முகக்கவசம் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.