டீசலை 52 ரூபாவினாலும் பெற்றோலை 19 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும்! – உதய கம்மன்பில

டீசலை 52 ரூபாவினாலும் பெற்றோலை 19 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும்! – உதய கம்மன்பில

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை தற்காலிகமாக இரத்துச் செய்யாவிடின் டீசலின் விலையை 52 ரூபாவினாலும்,ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 19 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும்.

எரிபொருள் விலையேற்றம், வரி நீக்கம் ஆகிய இரண்டில் ஒன்றை விரைவாக செயற்படுத்தாவிடின் எரிபொருளை கொள்வனவு செய்வதில் பாரிய நெருக்கடியையும் எதிர்க்கொளள்ள நேரிடும் என வலுசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.



கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் வீதான வரி விலக்கு சலுகை வழங்கப்பட வேண்டும் என நிதியமைச்சிடம் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் இதுவரையில் சாதகமாக பதில் கிடைக்கப்பெறவில்லை.

200 ரூபாவுக்கு டீசலை கொள்வனவுசெய்து அதனை 150 ரூபாவுக்கு விற்கும்போது நட்டமடைய நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.