கிரிக்கெட் வீரர் பானுக்கவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

கிரிக்கெட் வீரர் பானுக்கவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் துடுப்பாட்ட வீரர் பானுக்க ராஐபக்ஸவை எதிர்வரும் இந்தியா அணியுடனான தொடரின் போது இலங்கை அணியில் இணைக்குமாறு தெரிவித்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்திற்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இந்தியா அணியுடனான தொடரின் இலங்கை அணியின் பெயர் விபரம் அண்மையில் வௌியிடப்பட்டிருந்தது.

அதில் உடற்பயிற்சி ஒட்டத்தில் தகுதி பெற்றுக்கொள்ளாமை காரணமாக அவரை குழாத்தில் இணைத்துக் கொள்ளவில்லை.

குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.