ஆவணம் தொடர்பில் பல சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடப்படவுள்ளது.

ஆவணம் தொடர்பில் பல சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடப்படவுள்ளது.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணம் தொடர்பில் பல சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த ஆவணம் மொழிப்பெயர்க்கப்பட்டு வரும் நிலையில், வட மாகாணத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் இணைத்து கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடல் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.