தரம் 5 பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகாது

தரம் 5 பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என்று பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியாக்கப்படும் என்று பிரதி பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதாசன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

எனினும் இன்றையதினம் அது வெளியிடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.