‘நெதுன்கமுவ ராஜா’ யானை உயிரிழந்தது

‘நெதுன்கமுவ ராஜா’ யானை உயிரிழந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி – எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்து சென்ற நெதுன்கமுவ ராஜா என்ற யானை 69 வயதில் மரணித்துள்ளது.

குறித்த யானை இன்று அதிகாலை 5.30 அளவில் மரணித்ததாக அதன் பராமரிப்பாளர் வைத்தியர் ஹர்ச தர்மவிஜய தெரிவித்துள்ளார்.

1953ஆம் ஆண்டு இந்தியாவின் – மனிப்பூரில் பிறந்த நெதுன்கமுவ ராஜா, 10 அடி உயரம் கொண்டதாகும்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், இந்த யானை கண்டி – எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.