விற்றுத் தீர்ந்த டிக்கெட்..!

விற்றுத் தீர்ந்த டிக்கெட்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ரி20 போட்டிகளுக்குமாறு அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இரண்டு போட்டிகளுக்குமான அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி எதிவரும் 7 ஆம் திகதியும், இரண்டாவது ரி20 போட்டி 9 ஆம் திகதியும் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு எதிராக 3 ரி20 போட்டிகளிலும் 5 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.