மகிந்த ராஜபக்சவின் பதவி பறிக்கப்பட்ட பின்னணியில் செயற்பட்ட முக்கிய புள்ளிகள்

மகிந்த ராஜபக்சவின் பதவி பறிக்கப்பட்ட பின்னணியில் செயற்பட்ட முக்கிய புள்ளிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவியை பறிக்கப்பட்டதற்கும்,இந்திய உளவுத்துறையின் நலன்களால் நாட்டின் ஆட்சியை சீர்குலைப்பதற்குமான பின்னணியில் பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்துள்ளதாக முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் (FSP) பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் பசில் ராஜபக்ச இரகசியமாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க இந்திய றோ மற்றும் அமெரிக்க சிஐஏ அமைப்பு செயற்பாட்டு வந்ததாகவும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளை மீறி எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தி ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.