அரசு பணம் பசிலின் மனைவியின் அறக்கட்டளைக்கு

அரசு பணம் பசிலின் மனைவியின் அறக்கட்டளைக்கு

3.5 மில்லியன் ரூபாவை அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி அரச வங்கி ஒன்று மாற்றியது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றையடுத்தே இந்தக் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அரச வங்கியொன்றில் இருந்து, புஷ்பா ராஜபக்ஷ அறக்கட்டளைக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படாமல் 3.5 மில்லியன் ரூபா மாற்றப்பட்டுள்ளது தொடர்பாகவே விசாரணைகள் நடாத்தப்படுகின்றன.

இந்த பணப்பரிமாற்றலுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளைக் கண்டறியும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த அரச நிறுவனம் ஒன்றில் இருந்து நிதியைக் கைமாற்றும் போது, அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட வேண்டும். அந்த விதிமுறை மீறப்பட்டது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பசில் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது அவரது மனைவி இந்த அறக்கட்டளையை நடாத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

3.5 மில்லியன் ரூபாவை அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி அரச வங்கி ஒன்று மாற்றியது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றையடுத்தே இந்தக் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.