பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியின் போது, அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதான நால்வரில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மேற்படி நான்கு மாணவர்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.