உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கிடைத்த வரலாற்று அங்கீகாரம்!

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கிடைத்த வரலாற்று அங்கீகாரம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகும் ஒரு வேட்பாளராக உக்ரைன் நியமிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதனையடுத்து உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இதனை பரிந்துரையை அறிவித்துள்ளார்.

செய்தி மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர், ஐரோப்பிய முன்னோக்கிற்காக உக்ரேனியர்கள் “இறப்பதற்கும் தயாராக” இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே “ஐரோப்பிய கனவில் அவர்களும் எங்களுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்றும் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் அபிலாஷை, ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப வாழ நாட்டின் உறுதியை தெளிவாக நிரூபித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உக்ரைனின் சொந்த பாதையைத் தீர்மானிப்பது உக்ரைனின் உரிமையாகும்”

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்பார்ப்புகள் மிகவும் தெளிவாக உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது நாடு, இதுவரை நெருக்கமாக இருந்ததில்லை என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்

அவரை ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ருமேனியாவின் தலைவர்கள் நேற்று கிய்வில் சந்தித்த நிகழ்வை “வரலாற்று நாள்” என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் உக்ரைனுக்கு நிறைய செய்திகள் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மோல்டோவாவின் உறுப்பினர் நிலையையும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வரவேற்றுள்ளார்.

மோல்டோவா ஒரு உண்மையான சீர்திருத்தம், ஊழல் எதிர்ப்பு மற்றும் ஐரோப்பிய பாதையில் உள்ளது என்று உர்சுலா வான் டெர் லேயன் கூறியுள்ளார்.

ஆனால், முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்தஸ்தை பெற முன் சில நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

சீர்திருத்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய தெளிவான பாதையை வடிவமைக்க ஜோர்ஜியா இப்போது அரசியல் ரீதியாக ஒன்றுபட வேண்டும் என்று ஒன்றியத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.