போர் தீவிரமாக இடம்பெற்று வரும் உக்ரைனில் கோட்டாபயவுக்கு எதிர்ப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உக்ரைனில் இடம்பெறும் போருக்கு மத்தியில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

உக்ரைன் இராணுவத்துக்காகப் போரிடுவதாகக் கூறப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

“கோ ஹோம் கோட்டா” என குறிப்பிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பதாகையை ஏந்தியவாறு அவர் காணப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் எடுக்கப்பட்ட இந்தப் படம் தற்போத பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

COMMENTS

Wordpress (0)