வியாளேந்திரனின் தம்பி கைது!! இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்!!

வியாளேந்திரனின் தம்பி கைது!! இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்!!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பபினருமான சதாசிவம் வியாளேந்திரனின் தம்பி சதாசிவம் மயூரன் 15 இலட்சம் இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

இன்று காலை மட்டக்களப்பில்உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வைத்து 15 லட்சம் ரூபாய் பணம் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவ்வாறு இலஞ்சம் கோரயவர்களில் ஒருவர் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பபினருமான சதாசிவம் வியாளேந்திரனின் சொந்த தம்பியான சதாசிவம் மயூரன்.

இவர் இவர் பிரதேசசபையின் ஆழும்கட்சி உறுப்பினர். மற்றவர் ஏறாவூர்பற்று பிதேச சபையின் டீ.ஓ.வாகக் கடமையாற்றும் கமலக்கண்ணன். இவரும் முன்நாள் இராஜாங்க அமைச்சரின் நெருங்கிய உறவினர்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பி மயூரன் மற்றும் கமலக்கண்ணன் போன்றவர்களால் இலஞ்சம் கோரப்பட்டவர், கொழும்பில் உள்ள இலஞ்ச ஒழிப்பு திணைக்களத்திற்கு முறையிட்டதைத் தொடர்ந்து, கொழும்பில் இருந்து வந்த சிறப்பு இலஞ்ச ஒழிப்பு பிரிவினரே அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்ததாக இலஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் தெரிவித்தது.

COMMENTS

Wordpress (0)