மகிந்தவின் சொந்த உழைப்பில் வாங்கிய முக்கிய பொருள் நீண்ட நாட்களின் பின் மீண்டும் அவரிடமே!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ தான் முதன் முதல் சொந்த உழைப்பில் வாங்கிய அழகிய கார் ஒன்றினை மீண்டும் பெற்றுள்ளார்.

குறித்த கார் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த நிலையில் பின்னர் அது எஸ்.ஏ.அமரசிறி அவர்களின் புதல்வனான துமிந்த அமரசிறியவால் வாங்கப்பட்டது. அதற்கு பிறகு அது மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிடமே வழங்கப்பட்டுள்ளது.

துமிந்த அமரசிறி ” Duminda Bodykit ” என அழைக்கப்பட்டு வரும் பிரபல்யம் வாய்ந்த பணக்கார வர்த்தகராவார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மகனான யோஷித ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மோட்டார் வாகனம் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த கார் தற்சமயம் இந்தியாவில் இடம்பெற்ற உலகலாவிய மோட்டார் வாகனங்களின் கண்காட்சியில் வெற்றி பெற்றதாகும் என கூறப்படுகின்றது.