அடுத்த மாதம் முதல் மீண்டும் 5,000 ரூபா கொடுப்பனவு

அடுத்த மாதம் முதல் மீண்டும் 5,000 ரூபா கொடுப்பனவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்த மாதம் முதல் 33 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சமுர்த்தி பயனாளிகள், விசேட தேவையுடையோர் வயோதிப கொடுப்பனவு பெறுபவர்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கான காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

குறித்த கொடுப்பனவை வழங்குவதற்தகான முதற்கட்ட திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தற்சமயம் நிறைவடைந்துள்ளதாக மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் நீல் ஹப்புதந்திரி தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)