ஜோ பைடன் மனைவி, மகளுக்கு பயணத் தடை

ஜோ பைடன் மனைவி, மகளுக்கு பயணத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் மற்றும் மகள் ஆஷ்லே உள்ளிட்ட 25 போ் தங்கள் நாட்டுக்கு வர ரஷியா தடை விதித்துள்ளது.

தங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தவிர, அமெரிக்காவில் தங்கள் நாட்டுக்கு எதிரான இனவாத கருத்துக்களை தூண்டுவதாகக் கூறி, 4 எம்.பி.க்களுக்கும் ரஷ்யா தடை விதித்துள்ளது.