ரஷ்ய எல்லையில் நேட்டோ இராணுவ தளம் – அதிகரிக்கும் பதற்றம்

ரஷ்ய எல்லையில் நேட்டோ இராணுவ தளம் – அதிகரிக்கும் பதற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பின்லாந்தில் வருங்காலத்தில் அமைய இருக்கும் நேட்டோவின் இராணுவம் தளம் ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள Lappeenranta பகுதியில் அமைய வேண்டும் என பின்லாந்து பரிந்துரைத்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து ரஷ்யாவின் அண்டை நாடான ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நேட்டோ இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர்.

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளின் இந்த விண்ணப்பங்களுக்கு நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான துருக்கி தொடர்ந்து மறுப்பு தெரிவந்தது.

இந்நிலையில், ஸ்பெயினில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் துருக்கி பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு ரஷ்யா கடுமையான கண்டனம் தெரிவித்த நிலையில், பின்லாந்து ஸ்வீடன் மற்றும் நோட்டோ ஆகிய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்து இருந்தது.

இந்தநிலையில், பின்லாந்து நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணைந்த பிறகு, பின்லாந்தில் அமைய இருக்கும் நேட்டோ படையின் இராணுவ தளம் ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள Lappeenranta பகுதியில் அமைய வேண்டும் என அந்தப் பகுதியின் மேயர் பரிந்துரைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.