பிராந்திய ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகள் மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்று (04) முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

பிராந்திய அலுவலகங்களில் முன்கூட்டியே பதிவு செய்த 100 பேருக்கு மாத்திரம் முதற்கட்டமாக இந்தச் சேவை வழங்கப்படும்.

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு (www.immigration.gov.lk) பிரவேசித்து தமக்கான நாட்களை ஒதுக்கி கொள்ள முடியும்.