கந்தகாடு கைதியின் மரணம் : சில உண்மைகள்!

கந்தகாடு கைதியின் மரணம் : சில உண்மைகள்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை இன்று (05) பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கூர்மையற்ற  ஆயுதங்களால் தாக்கப்பட்டதன் மூலம் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதால் கைதி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 29 ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமையால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

குறித்த கைதியின் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது  ஏராளமான கைதிகள் புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.