பொறுப்பை ஏற்று பதவி விலகுங்கள்- ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்த்து, முழுமையான முறைமை மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஜனாதிபதியும் அரசாங்கமும் இராஜினாமா செய்வதோடு புதிய இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக, இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் நான் அன்புடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அவர்கள் இனி பதவியில் நீடிப்பதற்கு தார்மீக உரிமை இல்லாததால், பொறுப்பை ஏற்று தங்கள் பதவிகளில் இருந்து அவர்கள் விலக வேண்டும். இந்தச் சூழ்நிலையில் மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமல் அதிகாரத்தை மீண்டும் மக்களிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்

அரசாங்கம் பதவி விலகினால் அனைவருக்கும் நம்பகமான மற்றும் வெளிப்படையான கட்சி இடைக்கால அரசாங்கத்தை மக்கள் நிறுவ முடியும். இத்தகைய குறுகிய கால அரசாங்கம் நிபுணர்களின் அறிவுறுத்தல்களுடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்டின் நிலைமை மேம்பட்டவுடன், கூடிய விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவது அவசியம்” என்று கர்தினால் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிலையில் இருந்து தேசத்தையும் மக்களையும் விடுவிப்பதற்கு, தங்கள் அற்ப அரசியல் மற்றும் சித்தாந்த வரம்புகளைத் துறந்து ஒற்றுமையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் பணியாற்ற முன்வருமாறு எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.