இசைஞானி இளையராஜா எம்.பி.யானார்!

இசைஞானி இளையராஜா எம்.பி.யானார்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு, சமூக சேவை,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக இந்திய ஜனாதிபதி நியமிக்கலாம்.

அதன்படி, இசையமைப்பாளர் இளையராஜாவுடன், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.