அவசர கால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

அவசர கால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிக்கும் யோசனை நாடாளுமன்றில் மேலதிக 57 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாத விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது யோசனைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அவசரகால சட்டம் பதில் ஜனாதிபதியாக என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவினால் ஜூலை 17ஆம் திகதியன்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் இன்றைய வாத விவாதங்களின்போது ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

COMMENTS

Wordpress (0)