இரண்டாம் டெஸ்ட்டின் இறுதிநாள் இன்று

இரண்டாம் டெஸ்ட்டின் இறுதிநாள் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் 508 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய நாள் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது. இதற்கமைய பாகிஸ்தான் அணி வெற்றியடைவதற்கு 419 ஓட்டங்கள் தேவையாக உள்ளது.

முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 360 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பாகிஸ்தான் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 231 ஓட்டங்களையும் இலங்கை அணி 378 ஓட்டங்களையும் பெற்றன.

COMMENTS

Wordpress (0)