ஈராக்: பாராளுமன்றத்தை அதிரவைத்த போராட்டக்காரர்கள்: பின்னணி என்ன?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஈராக்கில், கடந்த பல மாதங்களாக நிலவி வரும் அரசியல் குழப்பத்தின் உச்சகட்ட காட்சிகள் நேற்று அரங்கேறின. முன்னாள் அமைச்சர் முகமது அல்-சூடானி பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டதைக் கண்டித்து, மதத் தலைவரும் அரசியல் கட்சித் தலைவருமான முக்தடா அல்- சாதரின் ஆதரவாளர்கள் நடத்திய பாராளுமன்ற நுழைவுப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைநகர் பாக்தாதில் உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட ‘கிரீன் ஸோன்’ பகுதியில் உள்ள பாராளுமன்றத்துக்குள் நுழைந்த அவரது ஆதரவாளர்கள், தேசியக் கொடியை ஏந்தியபடி, நாடாளுமன்றத்துக்குள் வலம் வந்தனர். கும்பலாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் பாடல்கள் பாடி, நடனமாடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முன்னதாக அவர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைவதைத் தடுக்க கண்ணீர் புகைக்குண்டு வீசி, கூட்டத்தைக் கலைக்க காவலர்கள் முயன்றனர். எனினும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உக்கிரமாக நுழைந்த அல்- சாதரின் ஆதரவாளர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்கள் அங்கேயே இருந்தனர். இந்நிலையில், அல்-சூடானி ஊழல்வாதி என்பதால் அவரை எதிர்ப்பதாக அல்-சாதரின் ஆதரவாளர்கள் கூறினர்.

COMMENTS

Wordpress (0)