ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறிய எலிசபத் மகாராணி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் மகாராணி வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஊடாக இந்த வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்குகு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

உங்களது பதவிக் காலத்தில் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவினை மேலும் முன்னெடுத்துச் செல்ல நான் விரும்புகின்றேன்.

உங்களது எதிர்கால வகிபாகம் மற்றும் வெற்றிக்கு எனது நல் வாழ்த்துக்கள்” என பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

COMMENTS

Wordpress (0)