நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 8 ஆம் திகதி!

நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 8 ஆம் திகதி!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டு சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை டிசம்பர் 8ஆம் மீள விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழங்கு இன்று (04) கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, இது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

COMMENTS

Wordpress (0)