காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தை, 23 வயது பெண்ணும் அடங்குவதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தாக்குதலில் பொதுமக்கள், ஹமாஸ் அமைப்பினர் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து முழு விவரத்தை பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்த தாக்குதலில் குறைந்தது 15  ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்குகரை பகுதியில் இந்த வார தொடக்கத்தில்ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதியை இஸ்ரேல் கைது செய்த நிலையில் இதற்கு பதிலடியாக உடனடி அச்சுறுத்தலாக மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த தாக்குதலை முறியடிக்க ஹமாஸ் அமைப்பினர் தங்கி இருந்த பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தற்போது பிரதமராக உள்ள யாயிர் லபிட் தனது பலத்தை நிரூபிக்க இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.