சமீபத்திய

15 நிமிடங்களுக்குள் திருத்தலாம் வாட்ஸ்அப் மெசேஜை எடிட் செய்யும் வசதி

15 நிமிடங்களுக்குள் திருத்தலாம் வாட்ஸ்அப் மெசேஜை எடிட் செய்யும் வசதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து உள்ளது. அதன் மூலம் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்பி விட்டால் திருத்தம் செய்ய இயலாது. அதை டெலிட் செய்து விட்டு புதிதாகத்தான் அனுப்ப முடியும். இப்போது அனுப்பிய செய்தியை திருத்தம் செய்ய வாட்ஸ்அப் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. செய்தி அனுப்பிய 15 நிமிடங்கள் வரை அதை எடிட் செய்து திருத்தம் செய்யலாம்.