சுமார் 843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்..!

சுமார் 843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
இலங்கை மத்திய வங்கி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன், சுமார் 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.

இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும், இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.