ராஜாங்கனை சத்தா ரதன தேரர் விளக்கமறியலில்..!

ராஜாங்கனை சத்தா ரதன தேரர் விளக்கமறியலில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் அனுராதபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.