சமீபத்திய

உலகக் கிண்ண அரையிறுதி போட்டி – பிட்ச் ஆலோசகரின் மின்னஞ்சல் கசிந்ததால் பெரும் சர்ச்சை..!

உலகக் கிண்ண அரையிறுதி போட்டி – பிட்ச் ஆலோசகரின் மின்னஞ்சல் கசிந்ததால் பெரும் சர்ச்சை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இருதி போட்டி அரம்பிப்பதற்கு முன் மின்னஞ்சல் ஒன்று கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐசிசியில் சுயாதீன ஆடுகள ஆலோசகரான (Independent pitch consultant) ஆண்டி அட்கின்சன் இன்று நடக்கும் போட்டி மும்பை பிட்ச் நம்பர் 6 ஐ சோதனை செய்துள்ளார். அவர் ஐசிசிக்கு அனுப்பிய கோபமான மின்னஞ்சல் தான் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

அவருடைய மின்னஞ்சலில் பிசிசிஐ மீண்டும் பழைய பிட்ச் பயன்படுத்துகிறது என்று புகார் வைத்துள்ளார். இந்தியா , நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் ஆட்டம் , ஏற்கனவே இரண்டு போட்டிகளை நடத்திய பிட்ச்சில் விளையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர்தான் ஐசிசியிடம் புகார் வைத்துள்ளார். இன்று நடக்கும் அரையிறுதியானது வான்கடே ஸ்டேடியத்தின் பிட்ச் ஃப்ளாக்கின் மையப் பகுதியான பிட்ச் 7 இல் விளையாடப்பட வேண்டும் என்று முதலில் கருதப்பட்டது.

பிட்ச் 7 என்பது உலகக் கிண்ணத்தின் லீக் கட்டத்தில் பயன்படுத்தப்படாத புதிய பிட்ச் ஆகும். இதில் எந்த லீக் ஆட்டமும் நடைபெறவில்லை. ஆனால் ஆட்டத்தை திடீரென பிட்ச் 6 க்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த பிட்ச் சற்று மையமாக உள்ளது என்பதால் இது தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம் போட்டியில் ஏற்கனவே இரண்டு போட்டிகளை நடத்திய பிட்ச் ஆகும் இது. இந்த பிட்சை பிசிசிஐ தேர்வு செய்ததை ஐசிசி இண்டிபெண்டண்ட் பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் விரும்பாமல் மெயில் அனுப்பி உள்ளார். அவர் அனுப்பிய மெயில்தான் பிட்ச் குறித்த சர்ச்சைக்கு காரணம் என்கிறார்கள்.

COMMENTS

Wordpress (0)