ICC யுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.