பட்ஜெட் 2 ஆம் வாசிப்பு பாராளுமன்றத்தில் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது..!

பட்ஜெட் 2 ஆம் வாசிப்பு பாராளுமன்றத்தில் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாராளுமன்றத்தில் (வரவுசெலவுத்திட்டம்) இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

ஆதரவாக122 வாக்குகள் எதிராக 77 வாக்குகள்

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவு செலவுத் திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கனால் கடந்த 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் திகதி முதல் இன்று (21) வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது.

இதற்கு அமைய குழு நிலை விவாதம் நாளை (22) முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இதற்கு அமைய 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி புதன்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.