சமீபத்திய

உயிரிழந்த இளைஞனுக்கு நீதி வேண்டும் – சடலத்துடன் மக்கள் போராட்டம்..!

உயிரிழந்த இளைஞனுக்கு நீதி வேண்டும் – சடலத்துடன் மக்கள் போராட்டம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் பூதவுடலுடன் இறப்புக்கு நீதி கோரி இன்று செவ்வாய்க்கிழமை சித்தங்கேணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன், பொலிசாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை போன்ற கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பு.கஜிந்தன்

COMMENTS

Wordpress (0)