சொதியில் உப்பு கூடிவிட்டது என்பதற்காக மனைவியை விவாகரத்து செய்யமுடியாது என்பதாலேயே பட்ஜெட்டுக்கு ஆதரவு..!

சொதியில் உப்பு கூடிவிட்டது என்பதற்காக மனைவியை விவாகரத்து செய்யமுடியாது என்பதாலேயே பட்ஜெட்டுக்கு ஆதரவு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சொதியில் உப்பு கூடிவிட்டது என்றுச் சொல்லியும், சோறு குழைந்துவிட்டது என்று கூறியும் மனைவியை விவாகரத்து செய்யமுடியாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பியான ரோஹித அபே குணவர்தன, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு விவாகரத்து செய்துவிட்டால், யாரை திருமணம் முடிப்பது எனக் கேட்ட, ரோஹித அபேகுணவர்தன, அதனால்தான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இந்த வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றது என்றார்.