செங்கடல் பகுதியில் அமெரிக்க கப்பலை தாக்கியுள்ளோம் – உரிமை கோரினர் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்..!

செங்கடல் பகுதியில் அமெரிக்க கப்பலை தாக்கியுள்ளோம் – உரிமை கோரினர் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்குகப்பலொன்றை தாக்கியுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேஓஐ என்ற சரக்குகப்பலை தாக்கியுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யேமனின் ஏடன் துறைமுகத்திலிருந்து தென்பகுதியில் காணப்பட்ட கப்பலொன்று வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது என கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான அம்பிரே தெரிவித்துள்ளது.

பல கடற்படை ஏவுகணைகளை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு சொந்தமான கேஓஐஎன்ற கப்பலை இலக்குவைத்துள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன துறைமுகத்திற்கு சென்ற கப்பலையே இலக்குவைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.